search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிபாளையம்"

    • திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.
    • எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மனுக்கள் வாங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மூதாட்டி வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவலரிடம் இருந்து மண் எண்ணை கேனை பிடிங்கி விசாரித்தனர். அப்போது அவர் ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியை சேர்ந்த பத்மா என தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் ஒரு மனு கொடுத்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனது வீடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரில் உள்ளது. எனது அண்ணன் எனது வீட்டை ஒருவருக்கு மாத வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டார். வாடகை ஒப்பந்த அடிப்படையில் நான் கடந்த 14.7.2021 அன்று வீடு வாடகைக்கு கொடுத்தேன்.

    இந்த நிலையில் ஒரு சில பிரச்சினைகளால் வீட்டை காலி செய்ய சொன்னேன். இதற்கு அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு தான் காலி செய்வேன். அதற்கு முன்பு இங்கு வரக்கூடாது என மிரட்டுகிறார்.

    இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்காக சிலேட்டர் நகரில் உள்ள எனது வீட்டில் தங்கி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தற்போது அவர் வீட்டை காலி செய்ய மறுக்கிறார். மேலும் எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார். எனவே தாங்கள் விசாரணை நடத்தி எனது வீட்டை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

    ×