search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pallipalayam"

    • திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.
    • எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மனுக்கள் வாங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மூதாட்டி வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவலரிடம் இருந்து மண் எண்ணை கேனை பிடிங்கி விசாரித்தனர். அப்போது அவர் ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியை சேர்ந்த பத்மா என தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் ஒரு மனு கொடுத்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனது வீடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரில் உள்ளது. எனது அண்ணன் எனது வீட்டை ஒருவருக்கு மாத வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டார். வாடகை ஒப்பந்த அடிப்படையில் நான் கடந்த 14.7.2021 அன்று வீடு வாடகைக்கு கொடுத்தேன்.

    இந்த நிலையில் ஒரு சில பிரச்சினைகளால் வீட்டை காலி செய்ய சொன்னேன். இதற்கு அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு தான் காலி செய்வேன். அதற்கு முன்பு இங்கு வரக்கூடாது என மிரட்டுகிறார்.

    இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்காக சிலேட்டர் நகரில் உள்ள எனது வீட்டில் தங்கி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தற்போது அவர் வீட்டை காலி செய்ய மறுக்கிறார். மேலும் எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார். எனவே தாங்கள் விசாரணை நடத்தி எனது வீட்டை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

    கோவில் திருவிழாவில் கட்டிட தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). கட்டிட தொழிலாளி.

    அக்ரஹாரம் அருகே உள்ள கோட்டக்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்று வருகிறது.

    இவ்விழாவையொட்டி நேற்று இரவு கோவில் அருகில் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை மேடை முன்பு அமர்ந்து கோட்டக்காடு, அக்ரஹாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அதுபோல் கார்த்திகேயனும் மேடை முன்பு அமர்ந்து கலைநிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் (26) என்பவர் கார்த்திகேயன் காலை மிதித்து விட்டார்.

    இதனால் கோபம் அடைந்த கார்த்திகேயன் எப்படி நீ எனது காலை மிதிக்கலாம்? என கூறி கண்டித்தார். இதனால் பகத்சிங்குக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பகத்சிங் கத்தியை எடுத்து கார்த்திகேயனின் வயிற்றில் குத்தினார். பின்னர் அவரது கழுத்தில் ஓங்கி குத்தினார். இரண்டு இடங்களில் கத்திக் குத்து விழுந்த கார்த்திகேயன் அப்படியே சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார்.

    ஆனாலும் பகத்சிங் ஆத்திரம் அடங்காமல் வெறிபிடித்தவர் போல் மேடை ஓரமாக நின்று கொண்டிருந்தார். இந்த கத்திக்குத்து சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி அங்கும், இங்குமாக ஓடினார்கள்.

    பின்னர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திகேயனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் ஏற்றி பள்ளிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கார்த்திகேயன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் பகத்சிங்கை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட கார்த்திகேயனுக்கு நிர்மலா என்ற மனைவியும், சத்ய பிரியா என்ற மகளும், தமிழ்ச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். மகள், மகன் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் கார்த்திகேயன் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் இன்று காலை 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. #MetturDam #CauveryRiver
    ஈரோடு:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி (120 அடி) உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    நேற்று 40 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இரவு 75 ஆயிரம் கன அடியாக திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து ஓடுகிறது.

    சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை பார்த்து மக்கள் மனதிலும் உற்சாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையிலும் திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்ட எல்லை வழியாக ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை, பவானி, பள்ளிபாளையம், ஈரோடு வழியாக பாய்ந்து செல்கிறது.

    ஈரோடு மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அதிகாரிகள் ஏற்கனவே பத்திரமான இடத்துக்கு செல்லும்படியும், தங்குவதற்கு மண்டபம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவுறுத்தினர்.

    இதையொட்டி பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள தங்கபட்டபள்ளம், பாவடி தெரு, புதன் சந்தை பேட்டை, பெரியார்நகர், ஜனதா நகர் பகுதிகளை சேர்ந்த 500 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்துவிட்டு மண்டபத்துக்கு பெட்டியும் படுக்கையுமாக சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று அதிகாலை காவிரி ஆற்றில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 500 வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் இன்று காலை சுமார் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளிபாளையம் மற்றும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் தண்டோரா போட்டு தொடர்ந்து மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை வெள்ள பாதிப்பு இல்லை. காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்து செல்வதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவித்துள்ளார். கலெக்டரின் உத்தரவுபடி பொதுப்பணி துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து சலவை தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கலெக்டர் வேண்டுகோள்படி குடிசைகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

    இவர்கள் தங்கி உள்ள குடிசைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதில் பல குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. #MetturDam #CauveryRiver
    ×