செய்திகள்

குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்

Published On 2018-03-24 09:48 GMT   |   Update On 2018-03-24 09:48 GMT
குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயமானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

சுசீந்திரத்தை அடுத்த பொட்டல் விளை பகுதியைச் சேர்ந்தவர் தங்ககண்ணு. இவரது மகள் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியைச் தேடி கல்லூரிக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு, தோழிகள் வீடுகளில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

தென்தாமரைகுளம் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது அண்ணன் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சம்பவத்தன்று ரெயில்வே வேலைக்கு விண்ணப்பித்து வருவதாக கூறி விட்டுச் சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

ராஜாக்கமங்கலத்தை அடுத்த அழிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டமணி. இவரது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்றவர் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

நித்திரவிளை கோவில் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றனி. இவரது மனைவி மெட்லின்(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து மெட்லின் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரை உறவினர்கள் வீடுகள் தேடி வந்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார். #tamilnews

Tags:    

Similar News