செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் செல்போன் கடையை உடைத்த கொள்ளையன் கைது

Published On 2018-03-23 08:46 GMT   |   Update On 2018-03-23 08:46 GMT
நுங்கம்பாக்கத்தில் செல்போன் கடையை உடைத்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விவாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் ராமா தெரு அருகே உள்ள செல்போன் கடை முன்பு இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நுங்கம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றனர்.

சிலர் கும்பலாக நிற்பதை பார்த்ததும் போலீசார் அவர்களை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் தப்பி ஓடினார்கள். ரேஸ் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவனை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட வாலிபரை செல்போன் கடை இருந்த இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 4 பேரும் செல்போன் கடையில் கொள்ளையடிப்பதற்காக செல்போன் கடையின் பூட்டை உடைத்ததும், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். அவனது பெயர் அகித்குமார் (வயது21) என்பதும் நடுக்குப்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவன் மீது அண்ணாசாலை, ஜாம்பஜார் போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தாம்பரம் பகுதியில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த அற்புதம் நகரை சேர்ந்த சின்னக்குட்டி என்கிற பிரதீப்குமார், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews

Tags:    

Similar News