செய்திகள்

பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை - சட்டசபையில் முதல்வர் பேச்சு

Published On 2018-03-21 08:07 GMT   |   Update On 2018-03-21 08:07 GMT
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என கூறினார். #CauveryIssue #EdappadiPalanisamy

சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என கூறினார்.

பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி பேசினார். அப்போது மத்திய அரசுடன் நட்புறவுடன் இருந்துவரும் தமிழக அரசு காவிரி விவகாரத்தில் பொதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் தி.மு.க. இதற்கு முன்பு பா.ஜ.க. உடன் கூட்டணியில் இருந்தபொழுது என்ன செய்தது?. பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை. காவிரிக்காக நாங்கள் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நமது எம்.பி.க்கள் அதற்காக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். ஆந்திர பிரச்சனைக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். காவிரிக்காக மற்ற மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.

தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக இந்த ஆட்சி இருக்கும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தார். ஆந்திர பிரச்சினைக்காக அவர் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வருகிறார். அவர்கள் அவர்களின் பிரச்சினைக்காக இதை கொண்டு வந்துள்ளனர். ஆனால் நாம் அப்படி இல்லை. காவிரி பிரச்சினைக்காக யாரும் நமக்காக குரல் கொடுக்கவில்லை. அதனால்தான் காவிரி பிரச்சினைக்காக நமது எம்.பி.க்கள் அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #CauveryIssue #EdappadiPalanisamy #tamilnews
Tags:    

Similar News