செய்திகள்

ராமர் ரதயாத்திரை எதிர்ப்பு இந்துக்களை அவமானப்படுத்துவது - தமிழிசை கண்டனம்

Published On 2018-03-20 07:06 GMT   |   Update On 2018-03-20 07:06 GMT
அமைதியமான முறையில் நடந்துவரும் ராமர் ரதயாத்திரையை எதிர்ப்பது இந்துக்களை அவமானப்படுத்துவது என்று பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #VHPRadhaYatra #RadhaYatra
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

ராமர், சிலையுடன் ஒரு ரதம் கடந்த பல நாட்களாக நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு சென்று இன்று தமிழகத்துக்கு வருகிறது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கைதாகும் அளவுக்கு என்ன இருக்கிறது?

நாடு முழுவதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. ஒரு அமைப்பு தங்கள் கருத்துக்களுடன் ஒரு ரத யாத்திரையை நடத்துகிறது. அதில் நாட்டுக்கோ, மதத்துக்கோ சமூகத்துக்கோ எதிரான எந்த கருத்தும் பரப்பப்படவில்லை. ராமர் சிலையை மட்டும் வைத்து யாத்திரை செய்கிறார்கள்.

இது தவறா? 85 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரு தெய்வ சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லகூட அனுமதிக்க கூடாது என்று சொல்வதும், எதிர்ப்பு தெரிவித்து கைதாவதும் இந்துக்கள் நம்பிக்கை சார்ந்த எந்த வி‌ஷயங்களும் தமிழ்நாட்டில் நடைபெற கூடாது என்று திட்டமிட்டு அப்பட்டமாக செயல்படுவது தெரிகிறது.

ஒருவேளை மற்ற மதத்துக்கு எதிரான கருத்துக்களையோ, ஒவ்வாத கருத்துக்களையோ தெரிவித்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

ராமர் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் வரவேற்கட்டும். வணங்கட்டும். உங்களுக்கு விருப்பமில்லையா முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட வேண்டியது தானே?

ரதத்தையே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? மு.க.ஸ்டாலினுக்கும் ரத யாத்திரை தடுப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்துக்களின் உரிமையை பறிக்க நீங்கள் யார்? இவர்கள் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே இருக்க கூடாது. கடவுள் வழிபாட்டு செயல்களே நடைபெற கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவது போல் இருக்கிறது. ஒட்டுமொத்த தேசம் சார்ந்த உரிமையை தமிழ்நாட்டில் மட்டும் பறிப்போம் என்ற உணர்வு அபாயகரமான விளைவுகளை உருவாக்கும்.

அமைதியாக தங்கள் வழிபாட்டு நிகழ்வுகளை கொண்டாடும் இந்துக்களை அவமானப்படுத்தாதீர்கள். உங்கள் அரசியலுக்காக மத வழிபாடுகளை கொச்சைப்படுத்தாதீர்கள். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #VHPRadhaYatra #RadhaYatra #TamilisaiSoundararajan
Tags:    

Similar News