செய்திகள்

ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும் - சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்

Published On 2018-03-20 06:02 GMT   |   Update On 2018-03-20 06:02 GMT
வி.எச்.பி. நடத்தும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். #RathaYatra #MKStalin #TNAssembly
சென்னை:

ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இன்று கேரளாவில் இருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு வந்துள்ள இந்த ரத யாத்திரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்த யாத்திரைக்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரத யாத்திரையை மறித்து போராட்டத்தில் ஈடுபடச் சென்ற திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரத யாத்திரைக்கு தடை கோரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். சென்னையில் கொசு பிரச்சனையை ஒழிக்கக் கோரியும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.



அப்போது பேசிய ஸ்டாலின், ‘ரத யாத்திரையால் நாட்டின் மதச்சார்பின்மை பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும். கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதனை தடை செய்ய வேண்டும். இதற்கு  அனுமதி அளித்தது தொடர்பாக டி.ஜி.பி. விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். #RathaYatra #MKStalin #TNAssembly #tamilnews
Tags:    

Similar News