செய்திகள்

மேலூர் அருகே ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு

Published On 2018-03-17 10:23 GMT   |   Update On 2018-03-17 10:23 GMT
மதுரை மேலூரை அடுத்த முக்கம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வாலிபர், மாடு முட்டியதில் பரிதாபமாக இறந்தார்.
மேலூர்:

மதுரை மேலூரை அடுத்த முக்கம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு ஜல்லிக்கட்டு அவிழ்த்து விடப்பட்டன. போட்டியை காண மேலூர், கீழவளவு, மேலவளவு உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்திருந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் அ.வள்ளலாலப்பட்டியை சேர்ந்த மூக்குசாமி மகன் செல்வேந்தன் (வயது 23). ஆர்வத்துடன் பங்கேற்றார். வேகமாக வந்த காளையை பிடிக்க முயன்றபோது செல்வேந்தன் காயம் அடைந்தார். அவரை உடனடியாக விழாக் குழுவினர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வேந்தன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News