செய்திகள்

ஆண்டவனே நம்ம பக்கம் - தன் மீதான விமர்சனங்களுக்கு ரஜினிகாந்த் பதில்

Published On 2018-03-05 15:17 GMT   |   Update On 2018-03-05 15:17 GMT
சாலைகளில் பேனர் வைப்பதில் விதிகளை மீறியுள்ளீர்கள், இனி அப்படி கூடாது என சென்னையில் நடந்து வரும் நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசினார். #Rajinikanth
சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-

கல்லூரி விழா என்று நினைத்தால் இது கட்சி மாநாடு போல உள்ளது, அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், பேசக்கூடிய சூழல் உள்ளது. எனவே, கொஞ்சமாக பேசி விடுகிறேன். நான் வரும்போது சாலைகளில் ரசிகர்கள் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்துள்ளீர்கள். இனி அப்படி கூடாது.

எனது அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களை அதிகம் பேர் கூறிவருகின்றனர். அவர்களிடம் நான் வாழ்த்துக்களை எதிர்பார்க்கவில்லை, ஆனால் இழிவுபடுத்தாதீர்கள். 

எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை. நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன், 1996 முதல் அரசியல்வாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. மக்களுக்கு நான் கடமை செய்ய வேண்டியுள்ளதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன்.

அரசியல் பாதை எனக்கும் தெரியும், பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை. தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி என மாபெரும் தலைவர்கள் இல்லாத இந்த சூழலில் தமிழகத்திற்கு தலைமை தேவைப்படுகிறது. எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும். அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது.

இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள் நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசிவருகிறார். #Rajinikanth
Tags:    

Similar News