செய்திகள்

அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை- ஐகோர்ட்டில் தீபா மனு

Published On 2018-02-22 08:16 GMT   |   Update On 2018-02-24 08:08 GMT
அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை எனவும் வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா யார் என்றே தெரியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அம்ருதா. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய தாயார் என்றும் தன்னை சிறு வயதிலேயே உறவினரிடம் ஜெயலலிதா ஒப்படைத்து வளர்த்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், தன் தாயார் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு பிராமண குலவழக்கப் படி நடைபெறவில்லை என்றும் அதனால் அவரது உடலை தோண்டி எடுத்து, குலவழக்கப்படி மீண்டும் இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தீபக் பதில் மனுவை தாக்கல் செய்து விட்டார்.


இந்த நிலையில், தீபா தன் தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னுடைய அத்தைக்கு வேறு யாரும் வாரிசு இல்லை என்றும் அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்றும் வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா யார் என்றே தெரியாது என்றும் அவர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அபரிக்க இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வர உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News