செய்திகள்

திருவாடானை பஸ் நிலையத்தில் சேதமடைந்த டைல்ஸ் கற்களை சீரமைக்க கோரிக்கை

Published On 2018-02-20 14:17 GMT   |   Update On 2018-02-20 14:17 GMT
திருவாடானை பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி பஸ் நிலையத்தில் உள்ள பழுதுகளை சரிசெய்து புதுப்பிக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி:

திருவாடானை பஸ் நிலையத்தில் டைல்ஸ் கல் பெயர்ந்த வண்ணம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பஸ் நிலையம் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை வழியாக ராமேசுவரம் சென்றடைய முக்கிய சந்திப்பாக உள்ளது. மேலும் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் அரசு, தனியார் வாகனங்களுக்கும் முக்கிய சந்திப்பு பஸ் நிலையமாக உள்ளது.

திருவாடானையைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களுக்கும் பயணிகள் பஸ் என இங்கிருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அந்த அளவிற்கு பஸ் நிலையத்தை விரிவு படுத்தவுமில்லை.

பஸ் நிலையம் கட்டி ஓராண்டுக்குள்ளாகவே ஒட்டப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்தும், பெயர்ந்தும் உள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இவை நாளடைவில் காணாமல் போக வாய்ப்புகள் உள்ளது.

பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி பஸ் நிலையத்தில் உள்ள பழுதுகளை சரிசெய்து புதுப்பிக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News