செய்திகள்

கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2018-02-19 16:54 GMT   |   Update On 2018-02-19 16:54 GMT
வேப்பந்தட்டை பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மற்றும் கிருஷ்ணாபுரத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சவுமியா உத்தரவின் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரத்தினம், பெரம்பலூர் நகர உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சின்னமுத்து ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது மளிகை கடை, பெட்டிக்கடை, டீ கடைகளில் உள்ள தண்ணீர் பாக்கெட், மோர் பாக்கெட், குளிர் பானங்கள், சாக்லெட், டீ தூள் ஆகியவற்றை எடுத்து பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த கடைகளில் இருந்த பொருட்களில் காலாவதியான பொருட்களை கண்டுபிடித்து அழித்தனர்.

மேலும் கடையில், கலப்பட பொருட்கள், தரமற்ற உணவு பொருட்கள், காலாவதியான பொருட்கள் மற்றும் முழுமையான லேபில் இல்லாத பொருட்களை கடைக்காரர்கள் விற்பனை செய்யக் கூடாது என எச்சரித்தனர். மேலும் இது போன்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். #tamilnews
Tags:    

Similar News