செய்திகள்

காவிரி நீர் தீர்ப்பு எதிரொலி: எடப்பாடி பழனிசாமியுடன் போலீஸ் கமி‌ஷனர் சந்திப்பு

Published On 2018-02-16 07:15 GMT   |   Update On 2018-02-16 07:15 GMT
காவிரி நீர் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து சட்டம்-ஒழுங்கு பற்றி ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ள இறுதி தீர்ப்பு தமிழகத்துக்கு பாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதைதொடர்ந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் கவனமுடன் உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது சென்னையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள கர்நாடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கி கூறினார். சென்னை மாநகர் முழுவதிலும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்பு பணிகள் பற்றியும் எடுத்து கூறினார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் இன்று தீர்ப்பு வெளியாவதை தொடர்ந்து கர்நாடக நிறுவனங்களில் காலையிலேயே போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர். தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டன. #tamilnews
Tags:    

Similar News