செய்திகள்

சென்னையில் 70 கர்நாடக நிறுவனங்களில் தீவிர போலீஸ் கண்காணிப்பு

Published On 2018-02-16 06:59 GMT   |   Update On 2018-02-16 06:59 GMT
காவிரி நதிநீர் விவகாரத்தில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கர்நாடகாவுக்கு சொந்தமான 70 நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள், ஓட்டல்கள், வங்கிகள், சங்க அலுவலகங்கள் உள்ளிட்டவையும் உள்ளன. கர்நாடகா வங்கி கிளை மட்டும் 66 இடங்களில் இயங்கி வருகிறது. மொத்தம் 70 நிறுவனங்கள் இங்கு செயல்பாட்டில் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் பணி புரிந்தும் வருகிறார்கள்.



தீர்ப்பு எதிரொலியாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இதனை தொடர்ந்து இந்த நிறுவனங்கள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள கர்நாடக வங்கி, பள்ளிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படும் தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தப்படுகிறது. கர்நாட மாநில அரசு பஸ்களை பொறுத்த வரையில் கோயம்பேட்டில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப் படுகின்றன. இந்த பஸ்களும் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கர்நாடக பஸ்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News