செய்திகள்

ராஜபாளையத்தில் வரி உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-25 14:55 GMT   |   Update On 2018-01-25 14:55 GMT
வரி உயர்வை கண்டித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்கு வரலாறு காணாத வகையில் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதை வாபஸ் செய்யக்கோரியும், ஏற்கனவே உள்ள வரி விதிப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், ராஜபாளையம் நகராட்சியில் முன் அறிவிப்பு இல்லாமல் வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. எடப்பாடி அரசின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகர் மக்கள் யாரும் இந்த கூடுதல் வரி விதிப்பைக் கட்ட வேண்டாம். கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக போராடியாவது பழைய வரி விதிப்பை வாங்கி தருவேன் என்றார்.

இதில் நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உதயசூரியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ் குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர் இளங்கோவன், மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News