செய்திகள்

பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு

Published On 2018-01-22 07:01 GMT   |   Update On 2018-01-22 07:01 GMT
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து எழும்பூரில் இருந்து தாம்பரத்துக்கு பஸ் கட்டணம் ரூ.39. ரெயில் கட்டணம் ரூ.10. இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை:

பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ரெயில் கட்டணம் குறைவாக இருக்கிறது.

இதனால் பயணிகள் ரெயில் பயணத்தை நாடுகிறார்கள். தொலை தூரங்களுக்கான கட்டண வித்தியாசம் ரூ.500 வரை உள்ளது. எனவே பயணிகள் ரெயில்களில் செல்ல அலைமோதுகிறார்கள். ஆனால் முன்பதிவு இருக்கைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பதால் பலர் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

சென்னையில் வரப்பிரசாதமாக இருப்பது மின்சார ரெயில்கள் பஸ் கட்டணத்தைவிட ரெயில் கட்டணம் மிகவும் குறைவு.

எழும்பூரில் இருந்து தாம்பரத்துக்கு பஸ் கட்டணம் ரூ.39. ரெயில் கட்டணம் ரூ.10. இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

பஸ்சில் ரூ.10 அல்லது ரூ.20-க்குள் வேலைக்கு சென்று வந்தவர்கள் இப்போது சுமார் ரூ.100 செலவிட வேண்டி உள்ளது. பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தும் அவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறி உள்ளது. எனவே பலர் சைக்கிளுக்கு மாறி வருகிறார்கள்.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் ஊர்களுக்கு சென்று வருவார்கள்.

ஆனால் இப்போது பஸ்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்யாவிட்டால் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் பலர் பயணங்களை தவிர்க்கிறார்கள்.

வருகிற 26-ந்தேதி குடியரசு தின விடுமுறையை தொடர்ந்து 3 நாட்கள் விடுப்பு கிடைப்பதால் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள்.

முக்கியமான ஊர்களுக்கு ரெயில் மற்றும் பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-



Tags:    

Similar News