செய்திகள்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை

Published On 2018-01-19 02:28 GMT   |   Update On 2018-01-19 02:28 GMT
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவர்கள் தரப்பில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை :

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது. அதேபோன்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகமும் விசாரணை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா? என்பதை அறிந்து கொள்வதற்காக ஆணையத்துக்கென்று தனியாக மருத்துவர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் குழுவை அரசு ஏற்படுத்திய பின்பு மருத்துவ அறிக்கையை பற்றி தெரிந்து கொண்டு அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News