search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை ஆணையம்"

    • ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்.
    • மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி கலந்து கொண்டு பேசினார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்த அறிக்கையில் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்தனர். அதில் சந்தேகம் உள்ளது என நான் எதற்காக கூறினேன் என்றால் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினைதான் மிக முக்கிய பிரச்சினையாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆஞ்ஜியோகிராம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதுதான் எனது கேள்வி.

    மேலும் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் வெஜிடேஷியன் என்ற கால்சியம் டெபாசிட்டர் மற்றும் இதயத்தில் சிறிய துவாரமும் இருந்துள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாக இருந்துள்ளது.

    3 மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை தேவை இல்லையென்று கூறினார்கள் என்றும், ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறியதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதில், மருத்துவர்கள் செரியன், கிரிநாத் ஆகியோர் ஜெயலலிதாவைப் பார்த்ததற்கான அறிகுறிகள் இல்லை. மருத்துவர் ஸ்ரீதர் அவ்வாறு நான் சொல்லவில்லை என்று சாட்சியம் சொன்னதன் அடிப்படையிலும், மருத்துவர் மேத்தீவ் சாமுவேல் அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லவில்லை என சாட்சியம் அளித்ததன், அடிப்படையிலேயே எய்ம்ஸ் மருத்துவனையின் அறிக்கையை நிராகரித்தேன். இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையை நான் குறைகூறவில்லை.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையை நிராகரித்துள்ளீர்களே நீங்கள் மருத்துவரா, உங்களால் எவ்வாறு இந்த முடிவுக்கு வர முடிந்தது என்று சிலர் கேட்கின்றனர். நானும் சட்டக்கல்லூரியில் படித்து பலருடன் பழகி உள்ளேன். பல வழக்குகளை சந்திப்பதில் ஏற்பட்ட அனுபவம் தான் என்னால் சரியான காரணங்களை கூற முடிகிறது. அதனால் மாணவர்களும் நன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அடுத்து பயணிக்கும் இலக்கு நன்றாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

    ஒரு பெண்ணானவள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் ஒரு உயிரை இந்த உலகத்துக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற சேக்ஸ்பியரின் பொன்மொழிக்கேற்றார்போல், ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும். மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதுகுவலி மற்றும் கை வலிக்காக சிகிச்சை அளித்த போது ஜெயலலிதா சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அப்பல்லோ மருத்துவர் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் சஜன் ஹெக்டே, செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    மருத்துவர் சஜன் ஹெக்டே அளித்த வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு முறை முதுகுவலி இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலையை பரிசோதித்து விட்டு முதுகுவலி குறைவதற்காக மருந்து, மாத்திரை வழங்கினேன். அதேபோன்று மற்றொரு முறை கை வலிப்பதாக கூறியதை தொடர்ந்து உரிய சிகிச்சை அளித்தேன். அந்த சமயங்களில் ஜெயலலிதா என்னிடம் சைகை மூலம் எங்கே வலிக்கிறது என்பதை தெரிவித்தார். மற்றபடி நான் அவருக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப், மருத்துவர் சஜன் ஹெக்டே

    செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் பணியில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு அளித்த மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்கள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள பலர் அப்பல்லோ மருத்துவமனையின் இயற்கை அமைப்புகளை ஒட்டியே சாட்சியம் அளித்துள்ளதால் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகசாமி, 29-ந் தேதி (நாளை) இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ஆணையத்தின் வக்கீல்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்யவும், அப்போது சசிகலா வக்கீல்கள் உடன் செல்ல அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தன்னையும், தனது வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008, அங்குள்ள நடைபாதை, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்த இடம் ஆகியவற்றை 29-ந் தேதி (நாளை) இரவு 8.15 மணி முதல் 8.40 மணி வரை ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள், அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் எந்தவித விவாதமும் மேற்கொள்ளக்கூடாது. மருத்துவமனை நிர்வாகத்துக்கும், நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் பார்வையிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்போது சசிகலா தரப்பு வக்கீல்களை அனுமதிப்பது போன்று தனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்பல்லோவில் மருத்துவர்களாக பணியாற்றிய அர்ச்சனா, பிரசன்னா மற்றும் செவிலியர்களாக பணியாற்றி வரும் ரேணுகா, ஷீலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்வதற்காக அவர்களை 31-ந் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பி.எல்.அருண்செல்வன், ரேடியோலாஜிஸ்ட் ரவிக்குமார் ஆகியோரும், 2-ந் தேதி அப்பல்லோ மருத்துவர் கே.ஆர்.பழனிசாமி, செவிலியர் அனுஷா ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
    ×