செய்திகள்

காணும் பொங்கல் கொண்டாட்டம்: மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் 42 டன் குப்பை அகற்றம்

Published On 2018-01-18 03:04 GMT   |   Update On 2018-01-18 03:04 GMT
பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில் மெரினா கடற்கரையில் 27 டன் அளவிலும், எலியட்ஸ் கடற்கரையில் 15 டன் அளவிலும் என மொத்தம் 42 டன் குப்பை அகற்றப்பட்டது.
சென்னை:

காணும் பொங்கல் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றுகூடி, குடும்பம் குடும்பமாக உணவு சாப்பிட்டும், ஆடிப்பாடி விளையாடியும் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். குப்பையை போடுவதற்காக முன்கூட்டியே மாநகராட்சி சார்பில் கடற்கரை மணற்பரப்பில் ஆங்காங்கே குப்பை கூடைகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் விழாக்காலம் ஓய்ந்தநிலையில் நேற்று மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் குப்பை அள்ளும் பணியில் அதிகாலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். குப்பை கூடைகள் இருந்த குப்பைகளையும், கடற்கரை மணற்பரப்பில் கிடந்த கழிவுகளையும் அவர்கள் அகற்றினர்.

அந்த வகையில் மெரினா கடற்கரையில் 27 டன் அளவிலும், எலியட்ஸ் கடற்கரையில் 15 டன் அளவிலும் என மொத்தம் 42 டன் குப்பை அகற்றப்பட்டது. இந்த குப்பைகள் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. #tamilnews

Tags:    

Similar News