செய்திகள்

தீபாவின் கார் ஓட்டுநராக இருந்த ராஜா திடீர் கைது: போலீசாரிடம் தீபா வாக்குவாதம்

Published On 2018-01-16 23:56 GMT   |   Update On 2018-01-16 23:56 GMT
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட ராஜா கைதான தகவலை அறிந்த தீபா மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #JDeepa
சென்னை:

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட ராஜா கைதான தகவலை அறிந்த தீபா மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). இவர் தியாகராயநகரில் உள்ள ஒரு கடையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று அவர் வாடிக்கையாளர் வீட்டுக்கு ஏ.சி.யை ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது உரசிவிட்டார்.

இதனால் கார் உரிமையாளர் ரமேஷ்குமாரை தாக்கி, செல்போனையும், ஆட்டோவில் இருந்த ஏ.சி.யையும் வாங்கி வைத்துக்கொண்டு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ்குமாரை தாக்கியது ஜெ.தீபாவிடம் கார் டிரைவராக இருந்த ராஜா என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பேரவையில் இருந்து ராஜா கடந்த வாரம் தான் நீக்கப்பட்டார் என்றாலும் அவர் கைதான தகவலை அறிந்த ஜெ.தீபா மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று அவரை விடுவிக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் எச்சரித்ததும் தீபா புறப்பட்டு சென்றார். #JDeepa #tamilnews
Tags:    

Similar News