செய்திகள்

புதிய சினிமா படங்களுக்கு 30 சதவீத கேளிக்கை வரி: சட்டசபையில் மசோதா தாக்கல்

Published On 2018-01-11 11:17 GMT   |   Update On 2018-01-11 11:17 GMT
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி திரையரங்குகளில் புதிய சினிமா திரைப்படங்களுக்கு 30 சதவீத கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு திரையுலக பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கேளிக்கை வரி விதிப்பது குறித்து சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இதுபற்றி பிரதிநிதிகள் கொண்ட ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

இதன் பரிந்துரைகள் அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதை பரிசீலித்த அரசு திரைப்பட காட்சியின் அனுமதிக்கான வரித்தொகை நீங்களாக கேளிக்கை வரியை வசூலிக்கவும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவும் அனுமதி வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இதன்படி மாநகராட்சி மற்றும் சிறப்புநிலை நகராட்சிகளின் எல்லைக்குள் அமைந்திருக்கிற திரையரங்குகளில் புதிய படங்களுக்கு வரித்தொகை நீங்களாக 30 சதவீத கேளிக்கை வரி செலுத்த வேண்டும். பழைய திரைப்படங்களுக்கு வரித்தொகை நீங்களாக 20 சதவீத கேளிக்கை வரி செலுத்த வேண்டும்.

மற்ற பகுதிகளில் புதிய, பழைய திரைப்படத்திற்கான வரித்தொகை நீங்கலாக மொத்தம் 20 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News