செய்திகள்

ஜெயலலிதா மரணம்: பூங்குன்றன் மீண்டும் 23-ம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு

Published On 2018-01-09 09:56 GMT   |   Update On 2018-01-09 09:56 GMT
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மீண்டும் 23-ம் தேதி ஆஜராகும்படி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #Jayadeathprobe
சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதனை ஏற்று பூங்குன்றன் இன்று எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக ஜெயலலிதா எந்த வகையிலான சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? உடல்நலம் மோசமாகும் நிலைக்கு வருவதற்கு என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கங்களை பெற்றார். 

ஆனால், விசாரணையின்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பூங்குன்றனிடம் சுமார் 2 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் மேலும் விளக்கங்கள் பெற வேண்டியிருப்பதால், வரும் 23-ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Jayadeathprobe #Poogundaran #tamilnews
Tags:    

Similar News