செய்திகள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் கரு. நாகராஜன் வேட்புமனு தாக்கல்

Published On 2017-12-04 08:50 GMT   |   Update On 2017-12-04 08:50 GMT
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் கரு. நாகராஜன் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சென்னை:

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

தேசிய கட்சியான பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மாநில தலைவர் தமிழிசை வந்திருந்தார்.

நாங்கள் தனித்து விடப்படவில்லை, தனித்தண்மையோடு இருக்கிறோம் என வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று சுமார் 45 சுயேட்சைகள் குவிந்தனர். கட்சியினர் வரிசையில் நிற்காமல் உள்ளே செல்வதாக அதிகாரிகளிடம் அவர்கள் முறையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News