செய்திகள்

முதுகுளத்தூர் அருகே பராமரிப்பு இல்லாத பறவைகள் சரணாலயம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2017-11-27 12:24 GMT   |   Update On 2017-11-27 12:24 GMT
முதுகுளத்தூர் அருகே பராமரிப்பு இல்லாததால் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்:

தமிழகத்தின் புகழ்பெற்ற சரணாலயங்களில் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயங்களும் அடங்கும்.

இங்கு வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க பார்வையாளர்கள் மாடம், சிமெண்ட் ரோடுகள் அமைக்கப்பட்டது.

இருந்த போதிலும் 9 ஆண்டுகளாக சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு நீர்வரத்து இல்லாததால் அங்குள்ள கண்மாய் வறண்டு காட்சியளிக்கிறது.

மழை சீசனில் வெளி, நாடுகளிலிருந்து இங்கு வரும் பறவைகள் வயல் வெளிகளில் தங்கி வேட்டைக்கு பலியாகிறது.

9 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகள் வரத்து இல்லாததால், முதுகுளத்தூரில் செயல்பட்டு வந்த வனத்துறை கிளை அலுவலகம் சாயல்குடிக்கு மாற்றப்பட்டது. இதனால் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள அரியவகை பறவையினங்கள், சரணாலயத்திற்கு செல்லும் வழிகாட்டி தகவல் பலகைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது.

சரணாலயத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News