செய்திகள்

ஓட்டேரியில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது

Published On 2017-11-23 10:21 GMT   |   Update On 2017-11-23 10:21 GMT
அயனாவரம், ஓட்டேரி, ஐ.சி.எப். பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 6 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 23 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லிவாக்கம்:

அயனாவரம், ஓட்டேரி, ஐ.சி.எப். பகுதியில் வழிப்பறி, செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க உதவி கமி‌ஷனர் சந்திர தாசன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் முத்து லட்சுமி, ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது ஓட்டேரி, டி.பி. ஆஸ்பத்திரி அருகே ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தில் 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் ஓட்டேரியை சேர்ந்த கெவின், சக்திவேல், சத்யா என்பதும் நகைபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் படி கூட்டாளிகள் சூர்யா, பிரசாந்த், மற்றொரு சூரியா ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். 6 பேரும் தனித்தனி குழுவாக பிரிந்து கைவரிசை காட்டி வந்தது தெரிய வந்தது.

கைதானவர்களிடம் இருந்து 23 மோட்டார் சைக்கிள், 4 பவுன் நகை, 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News