செய்திகள்

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2017-11-22 11:16 GMT   |   Update On 2017-11-22 11:16 GMT
பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் இந்த வருடமும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி வரை உயரவில்லை இருந்த போதும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்துக்காக தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டு உள்ளது.

அவவப்போது பெய்யும் மழை நீர் மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று 122.50 அடியாக இருந்த நிலையில் கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாக இன்று 122.80 அடியாக அதிகரித்தது. மேலும் நேற்று 1003 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1692 கன அடியாக அதிகரித்தது.

இதனால் நேற்று 1000 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் வினாடிக்கு 1400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3182 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை அணை நீர் மட்டம் 55.53 அடியாக உள்ளது. நீர் வரத்து 556 கன அடி. திறப்பு 1460 கன அடி. இருப்பு 2972 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 37.40 அடி. வரத்து 2 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 106.27 அடி. வரத்து 3 கன அடி. திறப்பு 30 கன அடி.

தேக்கடி 1, வைகை அணை 1.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News