செய்திகள்

ஜோலார்பேட்டை-காட்பாடியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில ரெயில் கொள்ளையன் கைது

Published On 2017-11-22 10:28 GMT   |   Update On 2017-11-22 10:28 GMT
ஜோலார்பேட்டை-காட்பாடியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில ரெயில் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

காட்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் மார்க்கத்தில் கடந்த 6 மாதங்களில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் 7 பேரிடம் செயின் பறிப்பு, பணம் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூர், கோவை, செல்லும் ரெயில்கள் ஜோலார்பேட்டை அடுத்த பக்ரி தர்க்கா அருகே செல்லும் போது சிக்னல் கிடைக்காமல் மெதுவாக செல்லும் அந்த இடத்தில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த வாரம் ஓடும் ரெயிலில் 2 பெண்களிடம் 9 சவரன் செயினை மர்ம கும்பல் பறித்து சென்றனர்.

இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இன்று அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தங்களது பாணியில் விசாரணை செய்தனர்.

அப்போது அவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த உத்தம் பட்டேல் (வயது30) என்பது தெரிய வந்தது.

ரெயில்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பும் உத்தம் பட்டேல் செயின் பறிப்பில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News