செய்திகள்

தேனி அருகே போலி டாக்டர் கைது

Published On 2017-11-20 04:46 GMT   |   Update On 2017-11-20 04:46 GMT
தேனி அருகே 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

தேனி அருகில் உள்ள வீரபாண்டியை சேர்ந்த சவேரியார் மனைவி பொன்னம்மாள் (வயது58). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் வயல்பட்டியில் கிளினிக் நடத்தி வந்த மூர்த்தி (49) என்பவரது மருத்துவமனைக்கு சென்றார்.

காய்ச்சலுக்கு ஊசி போட்ட பிறகு அவரது கையில் வீக்கம் ஏற்பட்டது. மறுநாள் இது குறித்து பொன்னம்மாள் அவரிடம் வந்து கேட்டார். ஊசி போட்ட பிறகு சரியாக தேய்த்து விடாமல் சென்றதால் ஏற்பட்டிருக்கலாம் என மூர்த்தி கூறினார்.

ஒரு வாரம் கழித்து கையில் ஏற்பட்ட வீக்கம் மேலும் அதிகமானது. இதனால் மீண்டும் கிளினிக் வந்து கேட்டபோது ரூ.5 ஆயிரம் கொடுத்தால் சரிசெய்து விடலாம் என கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொன்னம்மாள் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மூர்த்தி 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு எம்.பி.பி.எஸ். முடித்துள்ளதாக கூறி மருத்துவம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து கிளினிக்கையும் பூட்டி சீல் வைத்தனர்.
Tags:    

Similar News