செய்திகள்

போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை: தொண்டர்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர்- கே.பி.முனுசாமி

Published On 2017-11-18 09:24 GMT   |   Update On 2017-11-18 09:24 GMT
போயஸ் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையால் 1½ கோடி தொண்டர்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது, போயஸ் கார்டனில் நடந்த வருமானவரி சோதனையால் 1½ கோடி தொண்டர்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர். போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு சசிகலா, தினகரன், வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் போயஸ் இல்லத்திலேயே தங்கியிருந்தனர். அவர்களது வீடுகளில் நடந்த சோதனையின் அடிப்படையிலேயே இங்கும் ரெய்டு நடந்து இருப்பதாக தெரிகிறது.


இந்த சோதனைக்கு முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டதாக கூறுவது தவறான செய்தி. இந்த சோதனைக்கு சசிகலா, தினகரன் தான் காரணம். இந்த சோதனைக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை. மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கருத்தை கேட்டு கொண்டுதான் கவர்னர் நடந்து கொள்ள வேண்டும்.

மாநிலத்தின் முதல்வர் ஆலோசனையோடும் செயல்பட வேண்டும். கவர்னர் பதவி ஒரு கவுரவ பதவி. திராவிட இயக்க கொள்கைப்படி கூட்டாட்சி தத்துவத்தின் மூலம் மாநில சுயாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் கவர்னர் தனது பதவியை உபயோகித்து கொள்ள வேண்டும். பா.ஜனதா மாநில தலைவர் கூறும்போது, கவர்னர் ஆய்வை ஜெயலலிதா இருந்திருந்தாலும் வரவேற்று இருப்பார் என்று கூறியுள்ளார். அது தவறு. எங்கள் தலைவி ஜெயலலிதாவை பாரத பிரதமரே இல்லத்தில் வந்து தான் சந்தித்தார். பா.ஜனதா ஆட்சி நடைபெறும் பகுதிகளில் கவர்னர் ஆய்வு செய்யவில்லை என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News