செய்திகள்

கந்தன்பேட் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் கந்தசாமி ஆய்வு

Published On 2017-11-08 10:59 GMT   |   Update On 2017-11-08 11:00 GMT
கந்தன்பேட் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் மனைப்பட்டா வழங்க கோரி பொதுமக்கள், அமைச்சர் கந்தசாமிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் கந்தசாமி கந்தன்பேட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பாகூர்:

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தை அடுத்த கந்தன் பேட் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் மனைப்பட்டா வழங்க கோரி பொதுமக்கள், அமைச்சர் கந்தசாமிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் அமைச்சர் கந்தசாமி கந்தன்பேட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் ஏகாம்பரம், உதவி பொறியாளர் சாம்பசிவம், இளநிலைபொறியாளர் முகுந்தன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வின் போது அப்பகுதி மக்கள் அரசு கட்டிகொடுத்த வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் புதிய வீடுகள் கட்டத்தர வேண்டும். 35 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்கப்படாதால் ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து அவதிபட்டு வருகிறோம். எனவே உடனடியாக இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள மூடிக்கிடக்கும்; தொழிற்சாலைக்கு சொந்தமான காலி இடத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும்.

புதிய சுடுகாடு மற்றும் கருமாதி கொட்டகை கட்டித்தர வேண்டும்,கலையரங்கம் மற்றும் நவீன சமுதாய திருமண மண்டபம் கட்டிதர வேண்டும். பொது கழிப்பிடம் ஏன்று இல்லாமல் வீடுதோறும் கழிப்பிடம் கட்டிதர வேண்டும். புற்றுஅம்மன் கோயில் தெருவிற்க்கு சாலை மற்றும் குடிநீர் வசதி எற்படுத்தி தரவேண்டும் என கோரினர்.

பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் கந்தசாமி அதிகாரிகளுடன் சென்று திருமண மண்டபம் மற்றும் மனைப்பட்டா வழங்க உள்ள இடத்தை ஆய்வு செய்தார். காலம் கடத்தாமல் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் கோப்பு தயாரித்து திட்ட பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News