செய்திகள்
கோவையில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

கோவையில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டம்

Published On 2017-11-05 11:57 GMT   |   Update On 2017-11-05 11:57 GMT
தமிழகத்தில் இந்து தீவிரவாதம் பரவுவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு எதிர்ப்பு தெரித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது.
கோவை:

தமிழகத்தில் இந்து தீவிரவாதம் பரவுவதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

தமிழ்நாடு பாரத் சேனா அமைப்பின் சார்பில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணி கண்டன் தலைமை தாங்கினார். தொண்டாமுத்தூர் நகர செயலாளர் செந்தில் குமார்,செய்தி தொடர்பாளர் சரவணன், அமைப்பாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் சென்றனர். அங்கு நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய கோரி மனு அளித்தனர்.

இது குறித்து மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறியதாவது-

நடிகர் கமல்ஹாசன் இந்துக்கள் பற்றி அவதூறாக பேசி வருகிறார். இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.

விசுவரூபம் பட பிரச்சினையின் போது நாட்டை விட்டு வெளியேறுவதாக அவர் கூறினார். இன்று யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தெரியவில்லை.

தொடர்ந்து அவர் அவ்வாறு பேசினால் அவரது படத்தை ஓட விடமாட்டோம்.. அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News