செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத டாக்டர் அதிரடி மாற்றம்: விஜயபாஸ்கர் நடவடிக்கை

Published On 2017-10-25 06:43 GMT   |   Update On 2017-10-25 06:43 GMT
அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத டாக்டரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

சென்னை:

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காய்ச்சல் பாதித்தவர்களை நேற்று பார்த்தார். நோயாளிகளுக்கு தாமத்திக்காமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணி நேர மருத்துவர் டாக்டர் நந்தகுமார் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.


ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது ரத்த பரிசோதனை நிலையத்தில் இருந்து பரிசோதனை முடிவுகளை தாளில் எழுதி அளித்துள்ளதை விஜயபாஸ்கர் பார்த்தார்.

பரிசோதனை முடிவுகளை அச்சடித்து வழங்காமல் தாளில் எழுதி கொடுத்ததற்கு விளக்கம் கேட்டார். அங்குள்ள கருவிகள் குறித்தும் ஆய்வகத்தில் பணி புரியும் லேப்-டெக்னீஷியன்களிடம் அமைச்சர் கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து லேப் டெக்னீஷியன் திலகர் என்பவருக்கு பணியிட மாற்றமும், 2 ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News