செய்திகள்

அங்கன்வாடி மையங்களை மூட திட்டம்: ஜவாஹிருல்லா கண்டனம்

Published On 2017-10-16 07:10 GMT   |   Update On 2017-10-16 07:10 GMT
அங்கன்வாடி மையங்களை மூட திட்டமிடும் நிதி ஆயோக்கின் செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு அங்கன்வாடி மையங்கள் மூலமாக ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அங்கன்வாடியில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளுக்குப் பதிலாக மாதம் ரூ.180ஐ பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. நிதி ஆயோக்கின் இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.

மத்திய அரசு அங்கன்வாடி தொடர்பான நிதி ஆயோக்கின் பரிந்துரைகளை நிராகரித்து, அங்கன்வாடி மையங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News