search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி மையங்கள்"

    • அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன.
    • குழந்தைக்கும் ஆரோக்கியமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாது காக்கக் கூடிய குழந்தை களின் நலனைஉறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல் படுவதையும், மையங்களின் பராமரிப்பில் வளர்ப்புச் சூழலை வழங்கு வதையும் உறுதி செய்வது என்பதுஅரசினுடைய முக்கிய கடமையாகும். இந்த மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் குழந்தைக்கும் ஆரோக்கி யமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    எனவே, அங்கன்வாடி மையங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, அங்கன்வாடி மைய கட்டடத்தின் நிலை, கழிப்பறை வசதி மற்றும் தூய்மை, சுத்தமான குடிநீர் விநியோகம், சமையலறை கூடம், அங்கன்வாடி மையம்மற்றும் சுற்றுச்சுவர் ஓவியங்கள், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், குழந்தை களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் விளை யாட்டு பயிற்சிகள், அங்கன்வாடி யில் உள்ள கருவிகளின் நிலை, ஊட்டச்சத்து குறை பாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படு வதை உறுதி செய்திட தாய்மார்க ளின் கருத்துகளை கேட்டுதெரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மையங்களின்தேவைகளை அரசிற்கு தெரிவிப்பதை உறுதி செய்து, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகிய வற்றை சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு நடவடிவக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி குழந்தைகள் வருவதில்லை என்று கடிதம் பெற்றும் சில மையங்களை மூட முயற்சி எடுக்கின்றனர்.
    • 10 முதல் 15 குழந்தைகள் உள்ள மையங்கள் மினி மையங்களாக மாற்றப்படுகிறது.

    சென்னை:

    பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குவது மட்டுமின்றி அடிப்படை கல்வி பணிகளையும் அங்கன்வாடி மையங்கள் செயல்படுத்தி வருகிறது.

    வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் நாப்கின், சத்துமாவு வழங்குதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாகவும் குழந்தைகள் நலன் கருதி இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகள் குறைவாக உள்ள மையங்களை அருகில் உள்ள மையத்துடன் இணைப்பது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்தனர்.

    ஆனால் அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

    இதில் குறைந்த தொலைவில் உள்ள 2 மையங்களை ஒன்றிணைப்பது, 10 குழந்தைகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மையங்களை மூடுவது என்று திட்டமிட்டு வருகின்றனர். பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி குழந்தைகள் வருவதில்லை என்று கடிதம் பெற்றும் சில மையங்களை மூட முயற்சி எடுக்கின்றனர்.

    10 முதல் 15 குழந்தைகள் உள்ள மையங்கள் மினி மையங்களாக மாற்றப்படுகிறது. இப்படி மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மையங்கள் மூடப்படும் நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

    • முத்துப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 9.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (கிழக்கு ), மும்மூர்த்தி (மேற்கு ), மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஊராட்சி தலைவர் மகாலட்சுமி கண்ணன், புதூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வெற்றிவேல், ஒன்றிய துணை செயலாளர் கொப்பையா, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், கிளை செயலாளர்கள் பாண்டிய ராஜன், வடிவேல்ராஜ், கருப்பசாமி, செல்லபாண்டியன் ஒன்றிய பொறியாளர் தமிழ் செல்வன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 632 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் வழங்கினார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் கை கழுவும் பழக்கத்ைத ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு, கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 11 வட்டாரங்களில் உள்ள 1,504 அங்கன்வாடி மையங்களுக்கும் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் வட்டாரங்களில் உள்ள 867 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன.

    மீதமுள்ள ராஜபாளையம் ஊரகப்பகுதிகளில் உள்ள 136 அங்கன்வாடி மையங்க ளுக்கும், ராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் உள்ள 62 அங்கன்வாடி மையங்களுக்கும், சிவகாசி வட்டாரத்தில் உள்ள 181 அங்கன்வாடி மையங்களுக்கும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தில் உள்ள 156 அங்கன்வாடி மையங்களுக்கும், வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ள 102 அங்கன்வாடி மையங்களுக்கும் என மொத்தம் 637 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இதில் அவர் பேசியதாவது:-

    கல்விக்கு நிகராக சுகாதாரமும் முக்கியமான தாகும். கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழியாகும். பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சானிடேஷன் பர்ஸ்ட் தொண்டு நிறுவ னத்துடன் இணைந்து சுகாதார பொருட்களை வழங்குகிறது.

    இந்த சுகாதார பெட்ட கத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் உள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து, சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சானிடேசன் பர்ஸ்ட் நிறுவன தலைமை அலுவலர் பத்மபிரியா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் உள்ள 200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்டெப்லைசர், பென்டி ரைவ் போன்றவற்றையும் கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம், கருப்பசாமி நகர் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்யும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 இன்ச் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேகநாதரெட்டி கலந்து கொண்டு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்தின் சிறந்த செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஆயோக் ஜிகா நிதியை பயன்படுத்தி விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மைய குழந்தைகளின் முன்பருவ கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் 200 அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இதையொட்டி ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 இன்ச் ஸ்மார்ட் டிவி, ஸ்டெப்லைசர், பென்டி ரைவ் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×