search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
    X

    தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்

    • பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி குழந்தைகள் வருவதில்லை என்று கடிதம் பெற்றும் சில மையங்களை மூட முயற்சி எடுக்கின்றனர்.
    • 10 முதல் 15 குழந்தைகள் உள்ள மையங்கள் மினி மையங்களாக மாற்றப்படுகிறது.

    சென்னை:

    பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குவது மட்டுமின்றி அடிப்படை கல்வி பணிகளையும் அங்கன்வாடி மையங்கள் செயல்படுத்தி வருகிறது.

    வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் நாப்கின், சத்துமாவு வழங்குதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாகவும் குழந்தைகள் நலன் கருதி இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகள் குறைவாக உள்ள மையங்களை அருகில் உள்ள மையத்துடன் இணைப்பது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்தனர்.

    ஆனால் அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

    இதில் குறைந்த தொலைவில் உள்ள 2 மையங்களை ஒன்றிணைப்பது, 10 குழந்தைகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மையங்களை மூடுவது என்று திட்டமிட்டு வருகின்றனர். பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி குழந்தைகள் வருவதில்லை என்று கடிதம் பெற்றும் சில மையங்களை மூட முயற்சி எடுக்கின்றனர்.

    10 முதல் 15 குழந்தைகள் உள்ள மையங்கள் மினி மையங்களாக மாற்றப்படுகிறது. இப்படி மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மையங்கள் மூடப்படும் நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×