search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health products"

    • 632 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் வழங்கினார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் கை கழுவும் பழக்கத்ைத ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு, கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 11 வட்டாரங்களில் உள்ள 1,504 அங்கன்வாடி மையங்களுக்கும் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் வட்டாரங்களில் உள்ள 867 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன.

    மீதமுள்ள ராஜபாளையம் ஊரகப்பகுதிகளில் உள்ள 136 அங்கன்வாடி மையங்க ளுக்கும், ராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் உள்ள 62 அங்கன்வாடி மையங்களுக்கும், சிவகாசி வட்டாரத்தில் உள்ள 181 அங்கன்வாடி மையங்களுக்கும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தில் உள்ள 156 அங்கன்வாடி மையங்களுக்கும், வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ள 102 அங்கன்வாடி மையங்களுக்கும் என மொத்தம் 637 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இதில் அவர் பேசியதாவது:-

    கல்விக்கு நிகராக சுகாதாரமும் முக்கியமான தாகும். கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழியாகும். பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சானிடேஷன் பர்ஸ்ட் தொண்டு நிறுவ னத்துடன் இணைந்து சுகாதார பொருட்களை வழங்குகிறது.

    இந்த சுகாதார பெட்ட கத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் உள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து, சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சானிடேசன் பர்ஸ்ட் நிறுவன தலைமை அலுவலர் பத்மபிரியா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×