என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி.
    X

    ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்து குழந்தைகளுடன் குழு படம் எடுத்து கொண்டார்.

    200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகரில் உள்ள 200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்டெப்லைசர், பென்டி ரைவ் போன்றவற்றையும் கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம், கருப்பசாமி நகர் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்யும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 இன்ச் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேகநாதரெட்டி கலந்து கொண்டு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்தின் சிறந்த செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஆயோக் ஜிகா நிதியை பயன்படுத்தி விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மைய குழந்தைகளின் முன்பருவ கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் 200 அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இதையொட்டி ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 இன்ச் ஸ்மார்ட் டிவி, ஸ்டெப்லைசர், பென்டி ரைவ் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×