செய்திகள்

கிருஷ்ணகிரியில் சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி

Published On 2017-10-06 20:40 GMT   |   Update On 2017-10-06 20:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி தரப்பு, தண்டேகுப்பம் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி அதிகாலை மழையின் காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 5 பேருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் அவர்களின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News