செய்திகள்

திருச்சி மரக்கடை பகுதியில் திடீர் தீ விபத்து: 7 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

Published On 2017-09-30 17:07 GMT   |   Update On 2017-09-30 17:07 GMT
திருச்சி மரக்கடை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
திருச்சி:

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை பகுதியில் ஏராளமானகுடிசை வீடுகள் உள்ளன. இங்கு கூலி மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதில் உள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று காலை திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் இந்த தீயானது அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கும் பரவியது. இது  குறித்து திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  பின்னர்  மேலும் தீ பரவாமல் முற்றிலுமாக தடுத்து அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 7 குடிசை வீடுகளும், அதனுள் இருந்த பொருட்களும் முற்றிலுமாக  எரிந்து  சாம்பலாயின.  இந்த  தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உடனடியாக நிவாரண பொருட்களையும் அவர்க ளுக்கு வழங்கினார்.
அப்போது அமைச்சருடன் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி, கலிலுல் ரகுமான், அருள்ஜோதி, தர்கா காஜா, பிலிம் நாகராஜன், கயிலை கோபி, வணக்கம் சோமு மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.
Tags:    

Similar News