செய்திகள்

2-வது சீசன் தொடங்கியது: ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

Published On 2017-09-05 11:52 GMT   |   Update On 2017-09-05 11:52 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 2-வது சீசன் தொடங்கியதையொட்டி நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 2-வது சீசன் தொடங்கியதையொட்டி நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் ஏப்ரல்-மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் 2- வது சீசனும் தொடங்கும்.

இந்த நிலையில் தற்போது 2-வது சீசன் சாரல் மழையுடன் தொடங்கி உள்ளது. சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பட்ட இன்கா மேரி கோல்ட், விகோனியா, கேலன்துல்லா, ரெட்சால்வியா போன்ற மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

ஊட்டியில் 2-வது சீசன் தொடங்கியதாலும், பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறை நாளையொட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மேடு, பைகாரா நீர் வீழ்ச்சி முதுமலை ஆகிய பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை சாரல் மழையில் நனைந்தபடி கண்டு ரசித்தனர்.
Tags:    

Similar News