செய்திகள்

திண்டுக்கல் அருகே கேரளாவுக்கு அதிக மாடுகளை ஏற்றிச் சென்ற வாலிபர் கைது

Published On 2017-08-23 17:16 GMT   |   Update On 2017-08-23 17:16 GMT
லாரியில் அதிக அளவு மாடுகளை கேரளாவுக்கு ஏற்றிச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை:

மணப்பாறையில் இருந்து அதிக அளவு மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்று கேரளாவுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை அய்யலூரை அடத்த கடவூர் பகுதியில் ஒரு லாரியில் 29 மாடுகளை ஏற்றிக் கொண்டு வாலிபர் வந்து கொண்டு இருந்தார். போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த ராமர் மகன் சசிக்குமார் (வயது 29) என தெரிய வந்தது. மேலும் அவர் மாடுகளை கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதையும் ஒப்புக் கொண்டார்.

போலீசர் மாடுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சசிகுமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News