செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்

Published On 2017-08-22 06:15 GMT   |   Update On 2017-08-22 06:15 GMT
தூத்துக்குடி நள்ளிரவில் ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள ராஜபாளையம் மொட்ட கோபுரம் பகுதியில் ஆட்டோ மூலம் போதை பொருள் கடத்தப்படுவதாக நேற்று நள்ளிரவில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மொட்ட கோபுரம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை அதிகாரிகள் மறித்தனர். உடனே ஆட்டோவில் இருந்த 3 பேர் கீழே இறங்கி தப்பியோடிவிட்டனர். ஆட்டோ டிரைவரை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்திய போது ஆட்டோவில் அஜிஸ் என்ற ரூ.5 கோடி மதிப்பிலான 24 கிலோ எடையுள்ள போதை பொருள் ஒரு மூட்டையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து பிடிப்பட்ட ஆட்டோ டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்கள் யார்? வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் இந்த போதை பொருள் கடத்த முயற்சி நடந்ததா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News