செய்திகள்

சசிகலாவின் மறு சீராய்வு மனு மீது 22-ம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்

Published On 2017-08-18 14:41 GMT   |   Update On 2017-08-18 14:41 GMT
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டவர்களின் மறு சிராய்வு மனு விரும் 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நரிமன் விசாரிக்க சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், சசிகலாவின் மறு ஆய்வு மனு அன்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகலாவின் மறு சீராய்வு மனுவை நீதிபதிகள் அமித்தவா ராய், பாப்தே அடங்கிய அமர்வு வரும் 22-ம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News