செய்திகள்

புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

Published On 2017-08-09 09:20 GMT   |   Update On 2017-08-09 09:20 GMT
புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசார்ணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அசோக்குமார். இவரது மனைவி ஷாலினி. 2 மகள்கள் உள்ளனர். ஓட்டேரி மங்களபுரத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பணத்தகராறு சம்பந்தமாக புகார் கொடுக்க வந்த புளியந்தோப்பு கன்னிகா புரத்தை சேர்ந்த உமா ராணியுடன் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

உமாராணியின் கணவர் சக்திவேல் கடந்த 2010-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

அசோக்குமார்- உமாராணியின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. உமாராணியின் குடும்ப செலவுகளை அசோக்குமார் கவனித்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உமா ராணிக்கும், அவரது மகனுக்கும் வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதுபற்றி உமாராணி செல்போனில் அசோக் குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் உமாராணி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கும், உமாராணிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென்று அசோக்குமார் உடலில் தீப்பிடித்தபடி அலறினார். உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் இறந்தார்.

இதுகுறித்து புளியந் தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் வீட்டில் நடந்த தகராறின் போது அசோக்குமார் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக உமாராணி கூறினார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News