செய்திகள்

இலவச பொருட்களை விட்டு கொடுத்த பா.ஜனதா நிர்வாகிகள்

Published On 2017-08-01 10:18 GMT   |   Update On 2017-08-01 10:25 GMT
பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலர், இலவச பொருட்கள் வேண்டாம் என கையெழுத்திட்டு, தங்கள் ரே‌ஷன் கார்டு நகலை குடிமை பொருள் வழங்கல்துறை இயக்குனரிம் வழங்கினர்.
புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் தலைமையில், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், தங்க. விக்ரமன், செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் குடிமை பொருள் வழங்கல்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை இன்று சந்தித்தனர்.

அப்போது அரசால் வழங்கப்படும் இலவச பொருட்கள் வேண்டாம் என கையெழுத்திட்டு அதனுடன் ரே‌ஷன் கார்டு நகலையும் இணைத்து அளித்தனர்.

பின்னர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை ஏற்று முதல்கட்டமாக பா.ஜனதாவை சேர்ந்த 100 பேர் இலவசங்கள் வேண்டாம் என விண்ணப்பித்துள்ளோம்.

கடந்த 50 ஆண்டாக நடைபெற்ற ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு இலவசங்களை வாரி வழங்கியதால் அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிதி நெருக்கடியை போக்கும் வகையில் இலவசங்கள் வேண்டாம் என கூறியுள்ளோம். இதன் மூலம் அரசுக்கு செலவு மிச்சமாகும்.

இந்த நிதியில் ஏழைகளுக்கு வழங்கும் 20 கிலோ அரிசியை 50 கிலோ அரிசியாக உயர்த்தி வழங்க வேண்டும். முதியோர் பென்‌ஷன் நிதியையும் உயர்த்தி வழங்க வேண்டும். தொடர்ந்து கட்சி சார்பில் வசதிபடைத்தவர்கள் இலவசங்களை விட்டு தரக்கோரி வேண்டுகோள் விடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News