செய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெல்லி பயணம்

Published On 2017-07-30 23:35 GMT   |   Update On 2017-07-30 23:35 GMT
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெல்லி செல்கிறார்.
சென்னை:

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் பலமுறை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுவரை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காததால் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தவும் மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இன்று (திங்கட்கிழமை) காலை டெல்லி செல்கிறார். இதையொட்டி நேற்று இரவு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றார். 
Tags:    

Similar News