செய்திகள்
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள் கூட்டம்.

மர்ம காய்ச்சலால் பீதி: திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Published On 2017-07-24 09:27 GMT   |   Update On 2017-07-24 09:27 GMT
டெங்கு காய்ச்சல் பீதியால் ஏராளமான பொதுமக்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற படையெடுத்து வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பீதியால் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

உள் நோயாளி, வெளி நோயாளி பிரிவு, எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யும் இடம், மாத்திரை, மருந்து வாங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 300 முதல் 500 நோயாளிகள் வருவார்கள். தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

இவர்களில் 3 பேரை தனியாக வைத்து, டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா என மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News