செய்திகள்

கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் உத்தரவு

Published On 2017-07-23 07:41 GMT   |   Update On 2017-07-24 09:49 GMT
கொடுங்கையூர் பேக்கரி கடை தீ விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை கொடுங்கையூரில் மூடியிருந்த உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கொடுங்கையூர், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த ஆனந்தன் 20.7.2017 அன்றும், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த மகிழவன் 21.7.2017 அன்றும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஆனந்தன் மற்றும் மகிழவன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தீ விபத்தில் இறந்த ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரருக்கு ஏற்கனவே ரூ.13 லட்சம் உதவியையும், கடந்த 20-ந்தேதி பரமானந்தன், அபிமன்யூ ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Tags:    

Similar News