செய்திகள்

நங்கநல்லூரில் கூடுதலாக துணை மின் நிலையம்

Published On 2017-06-22 10:42 GMT   |   Update On 2017-06-22 10:43 GMT
மின் வினியோகம் சீராக கிடைக்க நங்கநல்லூரில் கூடுதலாக துணை மின் நிலையம் அமைக்க அரசு தயாராக உள்ளது என சட்டசபையில் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னை:

ஆலந்தூர் தொகுதி 167-வது வட்டம் எஸ்.ஐ.பி. காலனியில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தா.மோஅன்பரசன் (தி.மு.க.) கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் தங்கமணி கூறுகையில், இப்போது அந்த அவசியம் இல்லை என்றார். நங்கநல்லூரில் ஏற்கனவே துணை மின் நிலையம் உள்ளது என்றார்.

தா.மோ. அன்பரசன்:- இப்போது அங்கு மக்கள் தொகை அதிகமானதால் மின் தேவை அதிகரித்துள்ளது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் தனியார் இடத்தை கையகப்படுத்தி துணை மின் நிலையம் அமைக்க திட்டமிட்டிருந்தோம். அது பூங்கா இடம் என்பதால் அமைக்க முடியவில்லை. மூவரசம்பட்டு பகுதியில் அமைப்பதும் கிடப்பில் உள்ளது. எனவே அங்கு இதை அமைக்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி:- நங்கநல்லூர் பகுதியில் இடம் இருந்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு தயாராக உள்ளது. சென்னையை பொருத்த வரை துணை மின் நிலையம் அமைக்க இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. நீங்கள் சொல்லும் பகுதியில் இப்போது துணை மின் நிலையம் அமைய உள்ளதால் எதிர்காலத்தில் பிரச்சனை இருக்காது.
Tags:    

Similar News