செய்திகள்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-06-21 17:04 GMT   |   Update On 2017-06-21 17:04 GMT
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதிவளவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பணியாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் சென்னை வருவாய்துறை உயரதிகாரியை பணிமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்ட துணை தலைவர் சரவணன், மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஅனந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் பானுப்பிரியா, மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் குமரையா தலைமை தாங்கினார். மாவட்ட துணைதலைவர் சம்பத் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழரசன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் குமணன், ரகுமான் ஆகியோர் பேசினர்.
Tags:    

Similar News